UPDATED : அக் 05, 2026 02:55 PM
ADDED : அக் 05, 2026 02:56 PM
அ நிறம் | அளவு
கோவை:
அண்ணா பல்கலை 10வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையே மாணவர்களுக்கான கபடி போட்டி, கற்பகம் பொறியியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது.
18 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லுாரி 33 - 20 என்ற புள்ளிகளில் வி.எஸ்.பி. கல்லுாரியை வென்றது.
இரண்டாம் அரையிறுதியில் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி 31 - 19 என்ற புள்ளிகளில் ஜே.சி.டி., தொழில்நுட்ப கல்லுாரியை வென்றது.
இறுதிப் போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி 34 - 20 என்ற புள்ளிகளில் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
