UPDATED : அக் 05, 2026 02:55 PM
ADDED : அக் 05, 2026 02:55 PM
அ நிறம் | அளவு
கோவை:
தமிழ்நாடு, அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தாண்டுக்கான கணித திறனறி தேர்வு, நேற்று மாநிலம் முழுக்க நடந்தது.
கோவையில் 20 மையங்களில், 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வு எழுதினர். 6 - 9ம் வகுப்பு வரையிலான அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
வரும் 11ம் தேதி அறிவியல் திறனறி தேர்வு நடக்கிறது. வெற்றி பெறுவோருக்கு, ரொக்கப்பரிசுடன் சான்றிதழும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என, செயல் இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
