பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் இருவருக்கு மூன்று விக்கெட்
பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் இருவருக்கு மூன்று விக்கெட்
UPDATED : அக் 05, 2026 02:54 PM
ADDED : அக் 05, 2026 02:55 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
'பி.எஸ்.ஜி., மைதானத்தில் நடந்த போட்டியில் அரசூர் அரசுப் பள்ளி அணியினர் 16.1 ஓவரில் 25 ரன் எடுத்தனர். ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியினர் 2.1 ஓவரில் 28 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ. அணியினர் 25 ஓவரில் 150 ரன் எடுத்தனர். நிசந்தன், தவினேஷ் தலா 31 ரன் எடுத்தனர்.
எதிரணியின் தர்சன், பிரணவ் குமார் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். ராமகிருஷ்ணா சி.பி.எஸ்.இ. அணியினர் 18.1 ஓவரில் 63 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
