UPDATED : டிச 02, 2024 12:00 AM
ADDED : டிச 02, 2024 09:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:
கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இணைவு கல்லுாரிகளில் இன்று (2ம் தேதி) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் செய்திக்குறிப்பு:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் கடலுார், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவு கல்லுாரிகளில், இன்று (2ம் தேதி) நடைபெற இருந்த தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.