தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலும் 4,056 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு

மேலும் 4,056 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு

மேலும் 4,056 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு


UPDATED : நவ 23, 2025 08:01 AM

ADDED : நவ 23, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2025 08:01 AM ADDED : நவ 23, 2025 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில் மேலும் 4,056 அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் இல்லை. இதனால், தங்களின் பிள்ளைகளை பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

இதற்காக ஏழை, நடுத்தர குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவக்க அரசு கல்வித்துறை முடிவு செய்தது.

கடந்த 2018 - 19ம் ஆண்டு முதல் 2024 - 25 வரை 2,618 அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் 4,056 அரசு பள்ளிகளில் துவக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலை 10:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை வகுப்புகள் நடத்த வேண்டும். எல்.கே.ஜி.,யில் 4 முதல் 5 வயது வரையிலான சிறார்களை சேர்க்க வேண்டும். இதற்காக தனி வகுப்பறை தயார் செய்ய வேண்டும்.

ஒரு வகுப்பில் 40 சிறார்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். இந்த வகுப்புகள் துவக்குவது குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் பி.யு.சி.,யில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

முறைப்படி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எட்., பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us