UPDATED : ஆக 13, 2025 12:00 AM
ADDED : ஆக 13, 2025 04:00 PM

சென்னை:
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள், தங்களின் விடைத்தாள்களின் நகலை 14.08.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், அதே தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை எடுத்து, பூர்த்தி செய்து 18.08.2025 காலை 11.00 மணி முதல் 19.08.2025 மாலை 5.00 மணி வரை மாவட்ட அரசுத் தேர்வுகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கான கட்டணம் பாடம் ஒன்றுக்கு ரூ.505/- மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.205/- ஆகும். தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில் விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.