UPDATED : ஆக 13, 2025 12:00 AM
ADDED : ஆக 13, 2025 09:52 AM

டேட்டா அனலிட்டிக்ஸ் பாடப்பிரிவில் குறுகிய கால சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலைக்கழக டி.வி.எஸ்., தர மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
நோக்கம்
தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், நுண்ணறிவுகளைப் பிரித்தெடுக்கவும், தொழில்துறைகளில் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும் தேவையான திறன்களை வழங்கும் வகையில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
பாடங்கள்: புள்ளிவிவரங்களுக்கான அறிமுகம், மைய அளவீடு, எஸ்.கியூ.எல்., டி.பி.எம்.எஸ்., ஆர்.டி.பி.எம்.எஸ்., பொதுவான அட்டவணை வெளிப்பாடுகள், பவர் பி.ஐ., பயன்படுத்தி தரவு காட்சிப்படுத்துதல், அட்டவணையைப் பயன்படுத்தி தரவு காட்சிப்படுத்துதல், தரவை இணைத்தல், நிர்வகித்தல் மற்றும் திரட்டுதல், பைத்தான் அறிமுகம், சாட் ஜி.பி.டி., ஜெனரேட்டிவி ஏ.ஐ., ஆகியவை குறித்து இந்த படிப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த குறுகிய கால பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், தங்களது சுய விபரம் மற்றும் கல்வி கட்டண விபரத்துடன் autvscqm2015@gmail.com எனும் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பயிற்சி நாட்கள்: ஆகஸ்ட் 22, 23, 29 மற்றும் 30
பயிற்சி கட்டணம்: ரூ.11,800 (ஜி.எஸ்.டி., உட்பட)
பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.வி.எஸ்., தர மேலாண்மை மையம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 14
விபரங்களுக்கு: https://www.annauniv.edu/events.php

