தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியர்களுக்கு செயலி பயன்பாடு பயிற்சி

தலைமை ஆசிரியர்களுக்கு செயலி பயன்பாடு பயிற்சி

தலைமை ஆசிரியர்களுக்கு செயலி பயன்பாடு பயிற்சி


UPDATED : பிப் 06, 2026 01:20 PM

ADDED : பிப் 06, 2026 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 01:20 PM ADDED : பிப் 06, 2026 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
பள்ளி மேலாண்மைக் குழு செயலியை பயன்படுத்துவது குறித்து கடலுார், பெரம்பலுார் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நடந்த இந்த சிறப்பு பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் நலன், கற்றல் திறன், ஆசிரியர்கள் நலன் மற்றும் கற்பித்தல் திறன், பள்ளியின் வளர்ச்சிக்கு தேவைகள் குறித்து பள்ளி மேலாண்மைக்குழு செயலியில் எவ்வாறு பதிவு செய்வது என பயிற்சி தரப்பட்டது.

மாநில கருத்தாளர்கள் பிரிட்டோராஜ், கண்ணன், மாவட்ட கருத்தாளர்கள் கலைமதி, மணிமொழி, தேவகி, கீதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் கடலுார் மாவட்டம், மங்களூர், நல்லுார், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் பெரம்பலுார் மாவட்டம், பெரம்பலுார், வேப்பூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனிமுத்து செய்திருந்தார்.

ஒருங்கிணைப்பாளர் கனிமொழி நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us