UPDATED : நவ 09, 2024 12:00 AM
ADDED : நவ 09, 2024 11:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர்.
அவர்கள் ஆற்றி வரும் தொண்டுகளை கருதி, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர், தங்களை பற்றிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை, www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகம் அல்லது தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.