தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்

கல்வி உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்

கல்வி உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்


UPDATED : ஆக 15, 2025 12:00 AM

ADDED : ஆக 15, 2025 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2025 12:00 AM ADDED : ஆக 15, 2025 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:


ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, போஸ்ட் மெட்ரிக், ப்ரிமெட்ரிக் என, பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற, இன்று முதல் மாணவர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள், புதுப்பித்தால் மட்டும் போதுமானது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், உரிய ஆவணத்துடன் https://umis.tn.gov.in/ என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us