UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 10:57 AM
சிவகங்கை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஆக., 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின், சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருது வழங்க உள்ளார்.
இந்த விருது பெற தகுதியுள்ளவர்கள் தமிழகஅரசின் https://awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதில் இருந்து இரண்டு நகல்கள் எடுத்து, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கைக்கு ஜூன் 20 அன்று மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இந்த விருது பெற தமிழ்நாட்டில் பிறந்த, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டு சமூக நல நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.