UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 10:58 AM
திருப்பூர்:
நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்டம், ஊதியூர் சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய், 687 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
சஞ்சய் கூறியதாவது:
நான், 10ம் வகுப்பு படிக்கும் போதே, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கடந்த, 2 ஆண்டுகளாக யுடியூப் உதவியுடன் தான், நீட் தேர்வுக்குரிய வினாக்களை தேர்வு செய்து படித்தேன். நீட் தேர்வு தொடர்பாக, யுடியூபில், ஏராளமான சேனல்கள் உள்ளன. வினாக்களில் எழும் சந்தேகங்களுக்கும், யுடியூப் சேனல் வாயிலாகவே நிவர்த்தி பெற்றேன்.
வேறெந்த பயிற்சி மையத்துக்கும் சென்று படிக்கவில்லை. துவக்கத்தில் கடினமாகத் தான் இருந்தது. தொடர்ந்து, பயிற்சி பெற்ற நிலையில் எளிதாகவே இருந்தது. கடந்த, இரு ஆண்டுகளாக நேரத்தை வீணடிக்காமல் படித்ததால், முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.