தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : நவ 25, 2024 12:00 AM

ADDED : நவ 25, 2024 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2024 12:00 AM ADDED : நவ 25, 2024 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டோர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:


ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் செய்யும் தொண்டுகளை யொட்டி, தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது, தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்வு செய்து வழங்கி வருகிறது.

இந்த விருது வழங்கு வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருது பெற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தோரின் சமூக பொருளாதார, கல்வி நிலையை உயர்த்த முக்கிய முயற்சிகள் செய்திருக்க வேண்டும்.

இந்த சமூக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பணிகள் செய்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகள் சாதனைகளை குறிப்பிட வேண்டும்.

விருது பெற தகுதியுடையோர் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பத்தை கட்டணமின்றி www.tn.gov.in/ta/forms/department/1 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலகம், கலெக்டர் அலுவலகம் விழுப்புரம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ வரும் 27 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us