கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : மே 22, 2025 12:00 AM
ADDED : மே 22, 2025 08:34 AM
கடலுார் :
கடலுார் எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-26ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி சேர்க்கை நடக்கிறது என மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-26ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி சேர்க்கை நடக்கிறது. பயிற்சி காலம் ஒரு வருடம். இப்பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது.
பிளஸ் 2 தேர்ச்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேரலாம். 01.07.2025 அன்று குறைந்தபட்சம் 17வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 15.05.2025 முதல் 20.06.2025 மாலை 5:00 மணி வரை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பித்தால் ஏற்கப்படாது. இப்பயிற்சிக்கான தேர்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாயை இணையவழி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம் 20, 750 ரூபாயை ஒரே தவணையில் இணைய வழி மூலமே மேலாண்மை நிலையத்திற்கு நேரில் பயிற்சியில் சேரும்போது செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.3, கடற்கரை சாலை, சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகம், கடலுார் என்ற முகவரியிலும் 04142-222619 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.