தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 09, 2026 05:36 PM

ADDED : அக் 09, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 05:36 PM ADDED : அக் 09, 2026 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2026 - 27ம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கொண்ட கல்வி நிறுவனங்களில் (100 சதவீத தேர்ச்சி) 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவியருக்கு 30 சதவீதம்


விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.in மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம், 75 ஆயிரம் ரூபாய், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மாணவியருக்கு, 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்


கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விபரங்களை உறுதி செய்து புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பத்தை இம்மாதம், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், நவ., 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கடைசி தேதி, தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us