UPDATED : செப் 21, 2026 05:19 PM
ADDED : செப் 21, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அக்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிகளை www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு கட்டணம் 200 ரூபாயை www.karuvoolam.tn.gov.in மூலம் 'இ - சலான்' செலுத்தி, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல்நிலை எழுத்துத்தேர்வு கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ., 26ம் தேதியும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு செய்முறை தேர்வு நவ., 27ம் தேதியும் நடைபெறும்.
