தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை முதல் அக்., 8 வரை

கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை முதல் அக்., 8 வரை

கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை முதல் அக்., 8 வரை


UPDATED : செப் 21, 2026 05:17 PM

ADDED : செப் 21, 2026 05:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 05:17 PM ADDED : செப் 21, 2026 05:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்களுக்கென நாளை (செப்., 22) முதல் அக்., 8 வரை வட்டார அளவிலான கல்வி கடன் முகாம் நடைபெறும் என சிவகங்கை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இக்கல்வி கடன் முகாம் சாக்கோட்டை, கல்லல் ஒன்றிய மக்களுக்கு நாளை (செப்., 22) காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பூமாலை வணிக வளாகத்தில் காலை 10:30 முதல் மாலை 04:00 மணி வரை நடக்கும்.

செப்., 23ல் திருப்புவனம், செப்., 24 ல் சிங்கம்புணரி, செப்., 25ல் தேவகோட்டை, செப்., 28ல் திருப்புத்துார், அக்., 1ல் இளையான்குடி, அக்., 6ல் மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அக்., 8 ல் சிவகங்கை கலெக்டர் அலுவலக மீட்டிங் ஹாலில் இம்முகாம் நடைபெறும்.

நடப்பு நிதி ஆண்டில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.59 கோடி வரை கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, கல்லுாரி சேர்க்கை ஆணை, கவுன்சிலிங் ஒதுக்கீடு ஆணை, கல்லுாரியில் பெற்ற உண்மை தன்மை சான்று, கல்வி கட்டண விபரம், ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டவுடன் வரவேண்டும்.

இது தவிர பெற்றோரின் ஆதார், பான் கார்டு, வருவாய் சான்று, கடந்த 6 மாத வங்கி கணக்கு விபரம், ரேஷன் கார்டு, சாதி, இருப்பிட சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வரவும்.

மேலும் விபரத்திற்கு சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள முன்னோடி வங்கி மேலாளரை தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us