தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச தொழிற்பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச தொழிற்பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

இலவச தொழிற்பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : செப் 11, 2026 04:53 PM

ADDED : செப் 11, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 04:53 PM ADDED : செப் 11, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அறிக்கை:

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 'போட்டோகிராபி, வீடியோகிராபி' ஆகிய இலவச தொழிற்பயிற்சி நாளை துவங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி மொத்தம், 30 நாட்கள் நடக்கவுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க, 18 முதல் 50 வயது வரையிருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்திருக்கலாம். தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, 100 நாள் அட்டையிருந்தால் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களை சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிக்கு விருப்பமுள்ளோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர், ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், நுாறு நாள் வேலை அட்டை நகல்களை அவசியம் கொண்டு வர வேண்டும். இது பற்றி மேலும் விபரங்கள் பெற தொலைபேசி 04146 294115 எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us