ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
UPDATED : செப் 11, 2026 04:52 PM
ADDED : செப் 11, 2026 04:53 PM
செஞ்சி:
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் பொறியியல், செவிலியர் மற்றும் மருந்தியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்வி நிறுவன நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது, மாணவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும், திறன்களை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன், பொறியியல் முதல்வர் ராமதாஸ், நர்சிங் முதல்வர் உதயசங்கரி, பார்மசி முதல்வர் ராஜேஷ், கல்வியியல் முதல்வர்கள் கோவிந்தராஜ், சசிகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
