UPDATED : செப் 11, 2026 04:50 PM
ADDED : செப் 11, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:
ராஜபாளையம் மறவர் மகாசபை, கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா நடந்தது.
மகாசபை தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்து பாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் கதிரேசன் வரவேற்றார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், தொழிலதிபர் சிவராம போஸ் உள்ளிட்டோர் பரிசு, கல்வி உதவித் தொகைகளை வழங்கினர்.
பொன்னுராஜ் நன்றி கூறினார்.
