இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜன 22, 2026 12:09 PM
ADDED : ஜன 22, 2026 12:11 PM
சேலம்: இணைய வழித்திறன் மேம்பாட்டு பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா (சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை:
தமிழக கட்டுமான கழகம் சார்பில், 40 பிரிவுகளில் இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம், 2025 - 26ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள் அல்லது கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்கள், ஒரு குடும்பத்தில், 2 பேர் பங்கேற்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள், கோரிமேட்டில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நல வாரிய உறுப்பினருடன், அசல் ஆவணங்களுடன் வந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சி பெறலாம்.

