தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு துறையில் புத்தாக்க பயிற்சி

கூட்டுறவு துறையில் புத்தாக்க பயிற்சி

கூட்டுறவு துறையில் புத்தாக்க பயிற்சி


UPDATED : ஜன 22, 2026 12:08 PM

ADDED : ஜன 22, 2026 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2026 12:08 PM ADDED : ஜன 22, 2026 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை விளக்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டிற்கான கூட்டுறவு துறை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியை, 21, 22, 23ல் நடத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மாவட்ட அளவிலான புத்தாக்க பயிற்சி முகாம், நேற்று தொடங்கியது. நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். முகாமில், கலந்துகொண்ட அதிகாரிகளிடையே இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம் ஆகியோர் பேசினர்.

துணைப்பதிவாளர்கள் ஜேசுதாஸ், சுரேஷ், பால் ஜோசப், சேகர், இந்திரா, ஜெயந்தி, செல்வி, அறிவழகன், திருநாவுக்கரசு, சரவணன், நிர்மல் ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us