UPDATED : ஜன 20, 2026 05:04 PM
ADDED : ஜன 20, 2026 05:05 PM
தேனி: தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.600, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.900, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.1200, பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1800 என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிப்போர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு கிடையாது. மருத்துவம், பொறியியல், சட்டம், தொழிற்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தனியார், அரசிடமிருந்தோ வேறு எந்த உதவித்தொகையும் பெறுபவராக இருக்க கூடாது. விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்; பூர்த்தி செய்து வழங்கலாம், என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

