தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : மார் 17, 2026 03:15 PM

ADDED : மார் 17, 2026 03:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2026 03:15 PM ADDED : மார் 17, 2026 03:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2026 - 27 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர கல்லுாரி மாணவர்கள் மார்ச் 26க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் கல்லுாரி மாணவர்களுக்கு தங்குமிடம், உணவுடன் கூடிய அறிவியல் சார்ந்த பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவற்றில் சேர விரும்புவோர் 17 முதல் 25 வயதுக்குள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லுாரிகளில் சேரும் மாணவர்களாக இருக்க வேண்டும். தேசிய, மாநில போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுநிலைப் பட்ட முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்காக இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின் போது சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநில அளவிலான தேர்வு போட்டிகள் மார்ச் 30, காலை 07:00 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து மார்ச் 26 மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us