UPDATED : மே 20, 2026 10:43 AM
ADDED : மே 20, 2026 10:44 AM
சென்னை:
எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின், 'தமிழ்ப்பேராயம்' அமைப்பு சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சார்பில், 'தமிழ்ப்பேராயம்' என்ற அமைப்பு நிறுவப்பட்டு, ஏராளமான தமிழ்ப் பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது உட்பட 12 தலைப்புகளில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
முதல் எட்டு விருதுகளுக்கு உரிய நுால்கள், 2023, 2024, 2025ம் ஆண்டுகளில், முதல் பதிப்பாக வெளிவந்திருக்க வேண்டும். 2026ம் ஆண்டில் வெளிவந்த நுால்கள் தகுதி பெறாது. எந்த விருதுக்கு என்பதை குறிப்பிட்டு, நுாலின் ஐந்து படிகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
பிற நாட்டை சேர்ந்த தமிழறிஞர்களும் விண்ணப்பிக்கலாம். நுால் ஆசிரியரோ, பதிப்பகத்தாரோ, நுால்களை பரிந்துரைக்கலாம்.
விண்ணப்பங்களையும், நுால்களையும், 'தலைவர், தமிழ்ப்பேராயம், அறை எண் 518, 5ம் தளம், மைய நுாலகக் கட்டடம், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்கொளத்துார் - 603203, செங்கல்பட்டு மாவட்டம், என்ற முகவரிக்கு, ஜூன் 10க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
இது தொடர்பான விபரங்களை, https://www.srmist.edu.in/tamilperayam/ என்ற இணையதள முகவரியிலோ, 044 - 2741375 77 78 ஆகிய தொலைபேசி எண்களிலோ, தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
