sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் பயிற்சிக்கு இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

திறன் பயிற்சிக்கு இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

திறன் பயிற்சிக்கு இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : பிப் 06, 2026 12:51 PM

ADDED : பிப் 06, 2026 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 12:51 PM ADDED : பிப் 06, 2026 01:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: 'தாட்கோ' வாயிலாக பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதால், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகதர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு பயிற்சி, ஆடை வடிவமைப்பு, மேலாண்மை திறன் பயிற்சி, மற்றும் அழகுக்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் சேர, 18 - 25 வயது வரை உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ஆடை வடிவமைப்பு, மேலாண்மை திறன் பயிற்சி போன்றவைக்கு, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

இப்பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்யப்படும்.

இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்களாகும். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us