டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 28, 2026 12:35 PM
ADDED : ஜூன் 28, 2026 12:37 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டு 2026 - 2027க்கான மூன்றாண்டு எல்.எல்.பி., ஹானர்ஸ் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி., பட்டப்படிப்புகளுக்கு, ஜூன் 29 முதல் ஜூலை 19ம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
