தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூன் 28, 2026 12:33 PM

ADDED : ஜூன் 28, 2026 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 12:33 PM ADDED : ஜூன் 28, 2026 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்:
சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இது குறித்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுடர்விழி செய்திக்குறிப்பு:


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மோட்டார் மெக்கானிக், டீசல் இயந்திர மெக்கானிக், மின்சார வாகன மெக்கானிக், மின் கம்பியாளர், பொருத்துநர், ஐ.ஆர்.டி.எம்.டி., போன்ற தொழிற் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us