தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/38 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

38 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

38 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜன 29, 2026 01:38 PM

ADDED : ஜன 29, 2026 01:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2026 01:38 PM ADDED : ஜன 29, 2026 01:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பள்ளி கல்வித் துறையில் 38 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள 38 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று 29ம் தேதி காலை 10:00 மணிக்கு இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆவணங்களை இணைத்து ஹார்டு காப்பினை மார்ச் 12ம் தேதிக்குள் இயக்குநர், பள்ளி கல்வித் துறை, காமராஜர் கல்வி வளாகம், 100 அடி ரோடு, அண்ணா நகர், புதுச்சேரி - 605005 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்திற்கு 35 உடற்கல்வி ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் பொது - 14, எம்.பி.சி.,- 6, எஸ்.சி., - 6, ஓ.பி.சி., - 4, இ.டபுள்யூ.எஸ்., - 4, மீனவர் - 1 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இதே போல் மாகியில் தேர்வு செய்யப்பட உள்ள 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் பொது - 2, எம்.பி.சி., - 1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடற்தகுதி ஆசிரியர் பணியிடங்கள் 90 சதவீதம் கல்வி தகுதி அடிப்படையிலும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு மைய பதிவு சீனியாரிட்டி மதிப்பெண் அடிப்படையாக கொண்டு நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us