தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கு சர்வதேச ஒப்பந்தம்; சமுதாய மேம்பாடுக்கு கிராம இளைஞர்களுக்கு சான்றிதழ் பயிற்சி
தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கு சர்வதேச ஒப்பந்தம்; சமுதாய மேம்பாடுக்கு கிராம இளைஞர்களுக்கு சான்றிதழ் பயிற்சி
UPDATED : ஜன 29, 2026 01:36 PM
ADDED : ஜன 29, 2026 01:38 PM

குன்னுார்: 'செயற்கை நுண்ணறிவு துறையில், நீலகிரி மாணவர்களுக்கான களப்பயிற்சி அளிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் கேத்தி சி.எஸ்.ஐ., தன்னாட்சி பொறியியல் கல்லுாரியில் எத்தியோப்பியா நாட்டின் தொழில்நுட்ப அமைச்சக முதன்மை அறிவியல் ஆலோசகர் கிருஷ்ணராஜ் ராமசாமி, கோவை காக்னிதோர்ஸ் நிறுவன செயற்கை நுண்ணறிவு துறை முதன்மை செயல் அலுவலர் சுபாஷினி வெங்கடாச்சலம், சென்னை வில்லேஜ் டெக்னாலஜி ஆப் ஸ்கூல் ரோபோடிக்ஸ் இணை நிறுவனர் பாலாஜி ஆகியோர் தனித்தனியே, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், கோவை சி.எஸ்.ஐ., பிஷப் பிரின்ஸ் கால்வின் பேசுகையில், “எத்தியோப்பியா நாட்டின் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், உலகளாவிய ஆராய்ச்சி, திட்டபணிகள், நிதி ஆதாரங்கள், ஆராய்ச்சி, கருத்தரங்குகளில் ஒருங்கிணைந்து செயல்படுதல், மாணவர்களுக்கான உதவி தொகையுடன் களப்பயிற்சி ஒருங்கிணைக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில், நீலகிரி மாணவர்களுக்கான களப்பயிற்சி, கூகுள் கிளவுட் பிளாட்பார்ம்ஸ் போன்ற மேம்பட்ட படிப்புகள் பெறவும் பயிற்சி அளிக்கப்படும்.
'வில்லேஜ் டெக்னாலஜி ஆப் ஸ்கூல்' சார்பில், டிரோன், ரோபோட்ஸ் உருவாக்குதல், பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களில் பயிற்சி, சமுதாய மேம்பாட்டிற்கு கிராமப்புற இளைஞர்களுக்கு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படும்,” என்றார்.
திருமண்டல பொறுப்பாளர்கள் டேவிட் பர்னபாஸ், அமிர்தம், கல்லூரி இயக்குனர் முனைவர் அருமைராஜ், தாளாளர் காட்வின் டேனியல், முதல்வர் மெர்சி சாந்தி பங்கேற்றனர்.

