தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமையல் உதவியாளர் பணியிடம் பிப்., 27க்குள் விண்ணப்பிக்கலாம்

சமையல் உதவியாளர் பணியிடம் பிப்., 27க்குள் விண்ணப்பிக்கலாம்

சமையல் உதவியாளர் பணியிடம் பிப்., 27க்குள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : பிப் 18, 2026 03:00 PM

ADDED : பிப் 18, 2026 03:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 03:00 PM ADDED : பிப் 18, 2026 03:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
சத்துணவு மையங்களில், சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு வரும், 27க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:



கரூர் மாவட்டத்தில், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 24 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள, சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு, ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட துாரம் 3 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் https://karur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் வரும், 27 மாலை 05:45 மணிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us