UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே 20 முதல் ஜூன் 3 வரை செயற்கை நகை ஆவணங்கள் தயாரிப்பில் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு கிராம புறத்தை சேர்ந்த வேலையில்லா 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் மே 20ல் தேனி தாலுகா அலுவலகம் எதிரில் செயல்படும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் புகைப்படம், ஆதார் நகல் வழங்கி பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.