தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதமரின் பள்ளி மேற்படிப்பு திட்டம்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு திட்டம்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு திட்டம்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 24, 2026 04:55 PM

ADDED : செப் 24, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:55 PM ADDED : செப் 24, 2026 04:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு, பிரதமரின் பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை திட்டத்தில், உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக், இளங்கலை தொழிற் படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம், ரூ.2.50 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

நடப்பு 2026 - 27ம் ஆண்டு கல்வியாண்டில், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், https:..umis.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக பெறப்படுகிறது.

தகுதியுள்ள மாணவர்கள், வரும் அக்., 21ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us