UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 05:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு கல்லுாரிகளின் உதவி பேராசிரியர் பணிக்கான, ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவியில், 4,000 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், ஆகஸ்ட், 4ல் போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள், trb.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. ஏப்., 29 வரை பதிவு செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

