UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 04:59 PM
சென்னை:
பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் எளிதாக இருந்ததால், அதிக மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று ஆங்கில பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த முறை, சராசரி மாணவ - மாணவியரும் எளிதாக விடை எழுதும் வகையில், கேள்விகள் அமைந்திருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.
மேலும், பெரும்பாலான கேள்விகள், புத்தகத்தின் பயிற்சி வினாக்களில் இருந்தும், மாணவர்கள் அடிக்கடி படித்த பாடங்களில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. இதனால், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, 10ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எளிமையாக இருந்த நிலையில், ஆங்கில வினாத்தாளும் எளிமையாக இருந்துள்ளது. அதனால், இரு மொழி பாடங்களிலும், மாணவர்களின் மதிப்பெண் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

