UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:34 AM
சென்னை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை கவனிக்க, மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் மார்ச், ஏப்ரலில் நடத்தப்பட உள்ள பிளஸ் 1, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கண்காணிக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகளை நியமித்து, துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார். அவர்கள், தேர்வுகள் துறை இயக்குநருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, சென்னை - தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வர முருகன்; செங்கல்பட்டு - பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்; காஞ்சிபுரம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா; திருவள்ளூர் - தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பாடநுால் கழக இயக்குநர் சங்கர் - தென்காசி; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி - திருப்பத்துார்; பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்குநர் நாகராஜமுருகன் - கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.