தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : அக் 20, 2026 12:55 PM

ADDED : அக் 20, 2026 12:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:55 PM ADDED : அக் 20, 2026 12:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சத்யநாதபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோட்டுப்பட்டி கிராமத்தில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்து படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் கண்ணையன் முன்னிலை வகித்தார்.

மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, மருத்துவக் கல்லுாரியில் படித்து வரும் மாணவர்கள் முவித்தா, ஷாலினி, சிவரஞ்சனி, கவுசல்யா, கலைச்செல்வன், மணிகண்டன் ஆகியோருக்கு, நரசிம்ம கவுண்டர் தங்கம்மாள் அறக்கட்டளை சார்பாக பாராட்டி, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படனர்.

மோட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ள தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார். இதில், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சென்னப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரா மற்றும் பழனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us