UPDATED : அக் 20, 2026 12:54 PM
ADDED : அக் 20, 2026 12:55 PM
குழந்தைகளின் கனவுகளை வளர்த்து, நாளைய உலகை வழிநடத்தும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதில் காளப்பட்டியில் உள்ள சுகுணா பி.ஐபி., பள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. கோவையின் சிறந்த கல்வி நிறுவனப்களில் ஒன்றாகத் திகழும் இந்தப் பள்ளி, கல்வியுடன் நல்ல பண்புகளையும் மாணவர்களிடம் வளர்த்து வருகிறது.
பள்ளியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது, மறைந்த இராமசாமி அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், 1973 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய சுகுணா அறக்கட்டளையின் சமூக சேவையும் ஆகும்.
சுகுணா பி.ஐ.பி., பள்ளியின் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி, கல்வியின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்கி வருகிறார். அவருக்குப் பக்கபலமாக இருந்து, பள்ளியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து வழிகாட்டி வருபவர் அவரது கணவரும், சுகுணா குழுமத்தின் தலைவருமான லட்சுமி நாராயணசாமி. தொழில்துறையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த இவரது ஆற்றல் மிக்க தலைமை, கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
நவீன வகுப்பறைகள், ஐ பேட் வசதிகள், தொழில்நுட்பக் கல்வி, சிறந்த விளையாட்டு வசதிகள், ஹாக்கி 5 எஸ் ஆடுகளம், விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு கூடைப்பந்து அரங்கம் போன்ற வசதிகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
மாணவர்களைச் சிறந்த மனிதர்களாகவும் நாளைய தலைவர்களாகவும் கல்வி, ஒழுக்கம், அன்பு, மனிதநேயம், தன்னம்பிக்கை ஆகிய பண்புகளைக் கொண்ட, ஆற்றல்மிக்க தலைமுறையைச் செதுக்கும் புதிய சிந்தனை பள்ளியாக இப்பள்ளி தொடர்ந்து ஒளி வீசி வருகிறது.
சுகுணா எஸ்.ஐ.எஸ்., எர்லி இயர்ஸ் பள்ளி, காந்திபுரம் (செல்: 70944 53368), எஸ்.பி.ஐ.பி.எஸ்., காளப்பட்டி (செல் : 75026 39000), எஸ்.ஐ.எஸ் எர்லி இயர்ஸ் பள்ளி, கள்ளிப்பாளையம் (செல்: 88709 71537) ஆகிய பள்ளிகளில் பிளேகுரூப், நர்சரி, எல்.கே.ஜி., யு.கே.ஜி.,க்கான விஜயதசமி அட்மிஷன் நடைபெறுகிறது.
