UPDATED : ஆக 10, 2026 03:42 PM
ADDED : ஆக 10, 2026 03:43 PM
அ நிறம் | அளவு
கரூர்:
கரூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்து, சங்க கொடியை ஏற்றி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட தலைவர் முரளிதரன், மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த பிராமணர் சமூகத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் வெங்கடேஷன், இணை செயலர் ரமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
