தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாவை கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கோலாகலம்

பாவை கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கோலாகலம்

பாவை கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா கோலாகலம்


UPDATED : ஆக 10, 2026 03:43 PM

ADDED : ஆக 10, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 03:43 PM ADDED : ஆக 10, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், பாச்சல் பாவை கல்வி நிறுவனங்களில், பாவை நர்சிங், பார்மசி, அலைட் ஹெல்த் சயின்ஸ், பாவை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கல்வியியல் கல்லுாரிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. நிறுவனரும், தலைவருமான ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் தாத்ரிமதுக்கூர் சுபராவ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாவை நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி முதல்வர் ஹெப்சிராச்சல் செல்லராணி வரவேற்றார்.

தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், முதல் ரேங்க் பெற்ற இன்ஜி., மாணவர் சண்முகநாதனுக்கு, ஒரு லட்சம் ரூபாய், கலை கல்லுாரியில், முதல் ரேங்க் பெற்ற மாணவி ஹரிணிக்கு, 50,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

துணைத்தலைவர் மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், துணை செயலாளர் என்.பழனிவேல், பொருளாளர் ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் ராமசாமி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us