UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:28 PM
மதுரை:
மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மஹாலில் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரங்கராஜன் தலைமையில் நடந்தது.
மாநில தலைவர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மூத்த துணைத் தலைவர் இல.அமுதன், துணைப் பொதுச் செயலாளர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பார்த்தசாரதி பங்கேற்றார்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். புதிய மாவட்ட தலைவராக பக்தவச்சலம் பொறுப்பேற்றார். நிர்வாகிகளை கவுரவித்தனர்.
கூட்டத்தில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பாராட்டு தெரிவிப்பது, விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் விரைந்து அமல்படுத்த வேண்டும், சைவம், வைணவத்தை தவறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.