UPDATED : ஆக 05, 2026 04:42 PM
ADDED : ஆக 05, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் ஆக., 10 காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் அரசு, தனியார் என 21 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாம் மூலம் சுமார் 421 இடங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
அரசு, தனியார் ஐ.டி.ஐ.,யில் படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். மேலும் 8, 10, பிளஸ் 2 அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.
தொழிற்சாலைகளில் சேர்ந்து 6 மாதம் அடிப்படைபயிற்சி, ஓராண்டு 'அப்ரண்டிஸ்' பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
