தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுக்கான இலவச வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுக்கான இலவச வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுக்கான இலவச வகுப்பு துவக்கம்


UPDATED : ஆக 05, 2026 04:41 PM

ADDED : ஆக 05, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 04:41 PM ADDED : ஆக 05, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரயில், டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வெழுதும் மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாம் அலுவலர் அருண் வரவேற்றார். இப்பயிற்சி கல்லுாரி வளாகத்திலேயே நடைபெறுவதால் அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி கொள்ள மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டி தேர்வில் உள்ள படிநிலைகள் மற்றும் பயிற்சியின் அவசியத்தை விளக்கினார். மாணவர் தனஞ்ஜெயன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் தியாகராஜன் மற்றும் அருண்குமார் செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us