வள்ளலார் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு திறனறி தேர்வு
வள்ளலார் மாநாட்டில் பங்கேற்க மாணவர்களுக்கு திறனறி தேர்வு
UPDATED : ஜன 20, 2026 12:18 PM
ADDED : ஜன 20, 2026 12:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
வள்ளலார் கூறிய அறநெறிகளை பரப்பிடும் வகையிலான கண்காட்சி அரங்கம், மூலிகைக் கண்காட்சி, சித்த மருத்துவ முகாம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, மாணவ, மாணவியரை தேர்வு செய்ய போட்டித்தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகிறது.
இதன்படி திருப்பூர் மாவட்ட பள்ளிகல்வித்துறை, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியரை தேர்வு செய்வதற்கான கட்டுரை, பாடல் ஒப்புதவித்தல், ஓவியம் மற்றும் தனித்திறன் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில், 150 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

