UPDATED : ஜன 20, 2026 12:18 PM
ADDED : ஜன 20, 2026 12:19 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 23ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 23ம் தேதி மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லறை விற்பனை துறையை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இம்முகாமிற்கு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக், முடித்த ஆண், பெண் ஆகியோர் http://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதளத்தில் கேண்டிடேட் லாகின் வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும் விருப்பம் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

