UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
அரிக்கமேடு தொல்லியல் வரலாற்று நுாலை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
கல்வித் துறையின் முன்னாள் இணை இயக்குனர் ராமதாஸ், பேராசிரியர் ராமானுஜம் ஆகியோர் இணைந்து அரிக்கமேடு என்ற தொல்லியல் வரலாற்று நுாலை எழுதி உள்ளனர். இந்த நுால், அரிக்கமேடு பகுதியில் நடந்த பழங்கால வாணிப தொடர்புகளை விளக்குவதுடன், அப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவரிக்கிறது.
இந்த நுாலை, முதல்வர் ரங்கசாமி வெளியிட, முதல் பிரதியை, செல்வகணபதி எம்.பி., பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முதல்வர் தனிச்செயலர் அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.