UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 08:29 AM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் காந்தி கிராம் பல்கலைக்கழகம் சார்பில் அறிவாற்றல் அறிவியல் சர்வதேச மாநாடு நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக கலசார மையத்தில் நடந்த அறிவாற்றல் அறிவியல் சர்வதேச மாநாட்டை துணை வேந்தர் தரணிக்கரசு, பேராசிரியர் ராஜேஷ் புத்தானி, முனைவர் ரஜினி கொனாத்தாம்பி, சபேசன் சிவம், அப்போலோ மருத்துவமனை மதுரை செல்லமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கல்வியியல் துறை தலைவர் செல்வமணி வரவேற்றார்.
2 நாள் மாநாட்டில் லண்டன், சிங்கப்பூர், மலேசியா, மும்பை, சென்னை, மதுரையில் இருந்து 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜி ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். பல அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுகளை பேராசிரியர்கள் விஜயக்குமார், புக்யா தேவேந்திர, ஸ்ரீதேவி, மும்தாஜ்பேகம், பாலமுருகன், ஸ்ரீகலா முன்னிலையில் வழங்கினர். மலேசியா பல்கலைக்கழக பேராசிரியர் ஆம் ஏன்தே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, அறிவாற்றல் பயனுள்ள கற்பித்தலுக்கு வழிகாட்டி என்ற தலைப்பில் குழு விவாதம் நடந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகம் பேராசிரியர் ஜாகிதா பேகம் நன்றி கூறினார்.