3, 5, 8ம் வகுப்பில் படிக்கும் 15 லட்சம் பேருக்கு ஸ்லாஸ் தேர்வு கல்லுாரி மாணவர்கள் மூலம் நடத்த ஏற்பாடு
3, 5, 8ம் வகுப்பில் படிக்கும் 15 லட்சம் பேருக்கு ஸ்லாஸ் தேர்வு கல்லுாரி மாணவர்கள் மூலம் நடத்த ஏற்பாடு
UPDATED : ஜன 18, 2025 12:00 AM
ADDED : ஜன 18, 2025 11:59 AM

சேலம்:
தமிழகத்தில், 3, 5, 8ம் வகுப்புகளில் படிக்கும், 15.78 லட்சம் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து கண்டறிய, ஜனவரியில், ஸ்லாஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு கல்லுாரி மாணவ, மாணவியர், கள பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மத்திய அரசின் நிதி உதவியுடன், தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கற்றல், கற்பித்தல் நடைமுறைகளால், மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து, ஸ்லாஸ்(ஸ்டேட் லெவல் அச்சீவ்மென்ட் சர்வே) தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் முன்னேற்றத்துக்கு ஏற்ப புது திட்டங்களை செயல்படுத்தவும், கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறவும், இத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு, 3, 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்க-ளுக்கு, இத்தேர்வை, ஜனவரியில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்பில், 15.78 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 36,752 பள்ளிகளில், 3ம் வகுப்பில், 4.18 லட்சம் பேர், 5ம் வகுப்பில், 4.79 லட்சம் பேர், 8ம் வகுப்பில், 16,367 பள்ளிகளில், 6.66 லட்சம் மாணவர்கள் உள்ளனர். 3, 5ம் வகுப்புகளுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், 8ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறி-வியல், சமூக அறிவியல் பாடங்களில், மல்டிபிள் சாய்ஸ் அடிப்படையில் வினாக்கள், இத்தேர்வில் கேட்கப்படும். ஓ.எம்.ஆர்., விடைத்தாள் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தாமல், கல்லுாரி மாணவ, மாணவியரை, கள பணியாளர்களாக ஈடுபடுத்த முடிவு திட்டமிடப்பட்டளது. குறிப்பாக கலை அறிவியல், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 3, 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், 71,019 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, ஸ்லாஸ் தேர்வு நடத்துவது குறித்து, பயிற்சியை வழங்க வேண்டும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.