தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆயத்தமாக இருக்க அறிவுறுத்தல்

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆயத்தமாக இருக்க அறிவுறுத்தல்

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆயத்தமாக இருக்க அறிவுறுத்தல்


UPDATED : ஜன 18, 2025 12:00 AM

ADDED : ஜன 18, 2025 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2025 12:00 AM ADDED : ஜன 18, 2025 11:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை:
அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதற்கு தயாராக இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைப்பதற்கு, உடுமலை வட்டாரத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கிராமப்பகுதி அரசுப்பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., இணைய வசதி பெறுவது பெரிதும் சவாலாக இருந்தது. தற்போது அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது கொள்வதற்கும் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இணைய வசதிகளும் வழங்கப்பட்டு, மாதம்தோறும் அதற்கான தொகையும் கல்வித்துறையின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்களும் நிறுவப்பட உள்ளது.

அதற்கான உபகரணங்களை இணைப்பதும், ஸ்மார்ட் போர்டு அமைக்கும் பணிகள் மட்டுமே மீதமுள்ளன. நடப்பு கல்வியாண்டிற்குள் ஸ்மார்ட் வகுப்புகளை துவங்குவதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, மார்ச் இறுதிக்குள் துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் தயார்நிலையில் இருப்பதற்கு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை, பெற்றோரும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us