கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரியில் தள்ளுமுள்ளு
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரியில் தள்ளுமுள்ளு
UPDATED : செப் 26, 2024 12:00 AM
ADDED : செப் 26, 2024 09:31 AM
கீழ்ப்பாக்கம்:
கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி கடந்த 4ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட, மூன்றாமாண்டு மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் இருவர் கல்லுாரி நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரையும் அக்., 1ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, எஸ்.எப்.ஐ., எனும் இந்திய மாணவர்கள் சங்க சென்னை தலைவர் அருண்குமார், 26, சங்கத்தின் மத்திய செயலர் மிருதுளா, 22, ஆகியோர், நேற்று முன்தினம் கல்லுாரிக்கு வந்துள்ளனர். அப்போது, கல்லுாரி பேராசிரியர்களுக்கும், மாணவர்கள் அமைப்பினருக்கும் வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கல்லுாரியின் பொறுப்பு முதல்வர் பேபி குல்னாஸ் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய கல்லுாரி மாணவர்கள் உட்பட நான்கு பேரையும் அழைத்து விசாரித்து அனுப்பினர்.